ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமாகும். இது ரயில் பயணிகளுக்கு உணவு வழங்குதல், சுற்றுலா மேலாண்மை மற்றும் இணைய வழி பயணச்சீட்டு பதிவு ஆகிய சேவைகளை மேற்கொள்கிறது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி தட்கல் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் எதிர்பாராத பயணத்திற்கு ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் தட்கல் முறையில் பயணிகள் டிக்கெட்டையும் எளிதாக பெற இயலாது. ஏனெனில் சில வினாடிகளில் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பிவிடும். மேலும் இம்மாதிரியான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் ‘கன்பார்ம்டிக்கெட்’ என்ற செயலி ஆகும். இந்த செயலி மொபைலில் தட்கல் புக்கிங் வசதிக்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் எந்நேரத்திலும் பதட்டத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இந்த செயலியில் மிகவும் ரிலாக்ஸாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இந்த செயலி மூலம் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் நகரத்துக்கு எத்தனை ரயில்கள் செல்கின்றன மற்றும் ரயில் பெட்டிகளில்எத்தனை இருக்கைகள் காலியாக இருக்கிறது மற்றும் படுக்கை வசதி விவரங்களை அறிய முடியும். மேலும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தட்கல் முன்பதிவு செய்து அதில் பயணிக்க முடியாமல் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு கட்டணம் இல்லை. இதனைத்தொடர்ந்து ரயிலில் காலியிடத்தை பொறுத்தே தட்கல் முன்பதிவு செய்ய முடியும். இந்த செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.