Categories
சினிமா தமிழ் சினிமா

இனி கவர்ச்சிக்கு நோ…. சோகமான ரசிகர்கள்….. நித்யாமேனன் அதிரடி முடிவு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மலையாள சினிமாவின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் சித்தார்த் நடித்த 180 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், மாலினி 22, பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகை நித்யா மேனனின் கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் நித்யா மேனன் தற்போது ஒரு புதிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை கவர்ச்சியாக மட்டும் எதிர்காலத்தில் நடிக்க கூடாது என நிதியா முடிவு எடுத்து இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Categories

Tech |