தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. அது மட்டும் இன்றி ஒளிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.