Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைக்க…. என்ன செய்யணும்னு பாருங்க…!!!!

ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போகும் பட்சத்தில் அது சமூக விரோதிகளின் கைக்கு கிடைத்து அதனை பயன்படுத்தி அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்க யுஐடிஏஐ புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவும் முடியும். இவ்வாறு ஆதார் அட்டையை லாக் செய்ய விரும்புவர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அதன்படி முதலில் விர்ச்சுவல் ஐடியை உருவாக்க வேண்டும் . அதற்கு GVID <space> கடைசி 8 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யது தொடர்ந்து 1947 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். கிடைக்கும் விர்ச்சுவல் ஐடியை (VID) பத்திரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும் அதற்கு LOCKUID space கடைசி 4 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவேண்டும்.தொடர்ந்து 1947 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் யுஐடிஏஐ வழியாக ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்ய இயலும்

Categories

Tech |