Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை….. இந்த கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்….. அமைச்சர் அசத்தல்….!!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் தங்களுடைய கல்விக்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் வருடத்தில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அமைச்சர் அவர்களே மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு சேரும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

அதேபோல சில வருடங்களாக அரசு கல்லூரி மாணவர் சேர்க்கைக்கக்ன விண்ணப்ப பதிவு ஆன்லைன் முறையில் மட்டுமே பெறப்பட்டு வருகிறது. திண்டுக்கல் அரசு கல்லூரியில் ஆன்லைன்ல விண்ணப்ப பதிவு கொடுக்காத மாணவர்கள் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும் அமைச்சர் வழிவகை செய்துள்ளார். இணையத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்யாத மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கல்லூரியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |