ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அவர்களுக்காக வழங்கி வருகிறது. இதற்கிடையில் பல வருடமாக தங்களுக்கு பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும் பொழுது அதை அதிகாரிகளிடம் வேகமாக கூறுவதற்கான வழிகள் இல்லை என்று ஓய்வூதியதாரர்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கையானது அரசிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அரசு ஒரு சிறந்த தீர்வை அதற்கு வழங்கி உள்ளது.
அதாவது அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்கு இலவச டோல் ஃப்ரீ எண்ணை (1800-2200-14) அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கலாம். இந்த டோல் ஃப்ரீ சேவையானது வார இறுதி நாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது