பண்டிகை காலங்களில் அல்லது விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வெளியூரில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். அந்த சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து கட்டணத்திற்கு விரைவில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த முறை தான் நடத்திய சோதனையில் 3 பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறிய அவர் ரெட்பஸ் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலமாகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். இதற்கு ஒரு முடிவு கட்ட தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க ஆலோசனை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.