சிலிண்டர் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஒரு பொருளாக மாறி விட்டது. அப்படி இருக்கையில் திடீரென்று காஸ் சிலிண்டர் முடிந்துவிட்டால் டென்ஷன் ஆகி விடுவோம். இந்த பிரச்சினை போக்குவதற்காக இந்திய ஆயில் நிறுவனம் சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், Indane Combo Double Bottle Connection என்ற திட்டத்தின் மூலம் இரண்டு கேஸ் சிலிண்டர் பெற முடியும். அதாவது நாம் வழக்கமாக வாங்கும் பெரிய சிலிண்டர் உடன் 5 கிலோ குட்டி சிலிண்டர் வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கு பக்கத்தில் உள்ள இன்டேன் வினியோகஸ்தர் தொடர்பு கொள்ளலாம். ஆனால் குட்டி சிலிண்டர் பெறுபவர்கள் பரிசு புள்ளிகளை பெறவும் வாய்ப்புண்டு. இந்த பரிசு புள்ளிகளை பயன்படுத்தி அடுத்த சிலிண்டர் வாங்கலாம் அல்லது பெட்ரோல் டீசல் போட்டுக் கொள்ளலாம் என்று மழைக்கால அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.