Categories
தேசிய செய்திகள்

இனி கவலையே இல்ல…. சீட்டு கட்டாயம் கிடைக்கும்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பயணிகள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலையே தேர்வு செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும் விரைவில் சவுகரியமாக பயணிக்க முடியும் என்பதால் ரயிலை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது வழக்கமாக ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் அவ்வளவு சீக்கிரத்தில் கன்ஃபார்ம் டிக்கெட் ஒருவருக்கு கிடைத்து விடாது.

ஆனால் தற்போது புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. அதாவது ரயிலில் ஏதாவது பெர்த் காலியாக இருந்தால் அதனை பற்றி நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.அதன் பிறகு உடனே அந்த டிக்கெட்டை நீங்கள் முன் பதிவு செய்யலாம். அதற்கான வசதியை IRCTC கொண்டு வந்துள்ளது. IRCTC தளத்தின் மூலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை நிறுத்த போது அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதை நீங்கள் காண முடியும். எந்த ரயிலில் இருக்கை காலியாக இருந்தாலும் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

IRCTC புதிதாக புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியை தொடங்கியுள்ளது.அதன் மூலமாக பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட அனைத்து வகையான வசதிகள் பற்றிய தகவல்களை எளிதில் பெற முடியும். தற்போது இது அப்டேட் செய்யப்பட்டுள்ளது.ரயில்களில் இருக்கைகள் காலியாக இருந்தால் அது குறித்து அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாக வந்து சேரும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதற்காக பயனர் முதலில் ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு சென்று புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியை பெற வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்யக்கூடிய ரயிலில் ஏதாவது ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களது மொபைலுக்கு உடனே அறிவிப்பு வரும். அந்த எஸ்எம்எஸ் செய்தியில் ரயிலின் பற்றிய அனைத்து தகவல்களும் இருக்கும். நீங்கள் விரும்பினால் அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம். ஐ ஆர் சி டி சி இணையதளத்தை ஓபன் செய்து புஷ் நோட்டிபிகேஷன் என்ற விருப்பத்தை தேர்வு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Categories

Tech |