எளிதில் மொபைலை சார்ஜ் செய்ய புதிய AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நாம் அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகிப்பதால் அதில் இருக்கும் சார்ஜ் உடனடியாக தீர்ந்து விடுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது ஸ்மார்ட்போனை நாம் உபயோகிக்காமல் இருக்க முடியாது ஆனால் அதே நேரம் சார்ஜ் இறங்கிவிடும். தற்போது இதற்கென்று AtomXS கீசெயின் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் மூலமாக இரண்டு மணி நேரத்திற்கு உங்களது மொபைலை சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
800mAh மற்றும் 1300mAh பேட்டரியுடன் வரும் இந்த சார்ஜரில் யுஎஸ்பி கேபிள் மூலமாக மொபைலை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அதோடு இந்த சார்ஜரில் C- டைப் பின்னும் பொருந்தும். இதற்கு ரப்பர் கவர் போடப்பட்டு இருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை 800mAhக்கு 5,725 என்றும் 1300mAhக்கு 6,465 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.