இந்தியா தயாரிக்கும் அனைத்து விதமான கவசங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கவச உடைகளின் தேவை அதிக அளவு இருந்ததால், என்-95உள்ளிட்ட முகக்கவசம் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் உள்நாட்டு சந்தையில் அதிக அளவிற்கு வரத்து இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்து விதமான முகக் கவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு மத்திய அரசை விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நேற்று விளக்கியுள்ளது. இந்த அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக ஜெனரல் வெளியிட்டுள்ளார்.
மேலும் முகக் கவசங்கள் மற்றும் கவச உடைகள் ஆகியவற்றை வெளிநாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உலகிற்காக இந்தியா உருவாக்கும், என்-95 மற்றும் எப்எப்பி-2 முகக் கவசங்கள் தற்போது உலகம் முழுவதிலும் தாராளமாக ஏற்றுமதி செய்து கொள்ளலாம்”என்று அவர் கூறியுள்ளார்.