தமிழகத்தில் நாளை முதல் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கின்றார் கூட்டுறவு பசுமை பண்ணை காய்கறி கடைகள் மூலமாக நாளை முதல் இந்த விற்பனை தொடங்குகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளையும், அதற்கு மறுநாள் தமிழகம் முழுவதும் இந்த விற்பனை துவங்கும் என்று தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.