Categories
தேசிய செய்திகள்

இனி கார்டு கிடையாது, மேலாளர் தான்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ரயில்வே கார்டு பதவி என்று இனி அழைக்கப்பட மாட்டாது எனவும் அதற்கு பதிலாக புதிய பதவி பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே கார்டு பதவியில் இருப்பவர்கள் தங்களது பதவி பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையானது பரிசீலனை செய்து தற்போது அப்பெயரை மாற்றுவதற்கு முடிவெடுத்து இருப்பதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ரயில்வே மேலதிகாரி ஒருவர் கூறியபோது, திருத்தப்பட்ட பதவி கார்டு ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அடிப்படையில் இருக்கும் என்றும் ஆனால் அதே சமயத்தில் தற்போதைய கடமை மற்றும் பணிகள் பொறுப்புகள் ஒத்துப்போகும் வகையில் இந்த புதிய பதவிகளின் பெயர் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த பதவி பெயர் மாற்றம் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பொது மற்றும் துணை விதிகளில் ஒரு ரயில்வே கார்டு அந்த ரயிலின் மேலாளர் என்று குறிப்பிடுவது தான் முறையானது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுவரை அசிஸ்டன்ட் கார்டு என்று அழைக்கப்பட்டவர் இனி அசிஸ்டண்ட் பயணிகள் ரயில் மேலாளர் என அழைக்கப்படுவார்.

அதேபோன்று கூட்ஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் கூட்ஸ் ரயில் மேலாளர் என்று அழைக்கப்படுவார். அதுமட்டுமல்லாமல் சீனியர் கூட்ஸ் கார்டு என அழைக்கப்பட்டவர் சீனியர் ரயில் மேலாளர் என்று அழைக்கப்படுவார். அதேபோன்று சீனியர் பயணிகள் கார்டு என்று அழைக்கப்பட்டவர் சீனியர் பயணிகள் ரயில் மேலாளர் என்று அழைக்கப்படுவார் எனவும், எக்ஸ்பிரஸ் கார்டு என்று அழைக்கப்பட்டவர் எக்ஸ்பிரஸ் ரயில் வேளாளர் என அழைக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |