தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருவாகி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு இரவு ஊரடங்கு கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. நேற்று திடீரென தொற்று பாதிப்பு 1300 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்த வேண்டும் என்று பெங்களூர் மருத்துவ வல்லுநர் குழு கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஆட்டோ, டேக்ஸி மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதனைப்போலவே குறிப்பிட்ட பகுதிகளில் 2 சதவீதம் பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டால் ஆரஞ்ச் அலர்ட் பகுதி என்றும், 3% பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் ரெட் அலேர்ட் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவக்குழு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.