இந்தியாவில் மத்திய அரசு சென்ற வருடம் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. அப்போது 2 கட்டங்களாக ஊதியஉயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்களும், ஓய்வூதியர்களும் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்பின் 2022 ஆம் வருடம் முதல் அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயரும் என தகவல்கள் வெளியாகியது. அந்த வகையில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இப்போது 34% அதிகரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் 4 -5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.
இப்போது மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்த்தி வருகின்றனர். தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ராஜஸ்தானில் கால்நடை மருத்துவபயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரையிழலும் மருத்துவம் மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமே அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் கால்நடைமருத்துவம் பயிற்சி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியானது வழங்கப்படும் என ராஜஸ்தான்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு 3,500 முதல் 14,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி மற்றும் உதவித்தொகை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தேதியிட்டு மருத்துவ, ஆயுர்வேத கால்நடை மருத்துவபயிற்சி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.