விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி என்பவர் நடித்து வந்தார். இவர் விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.தற்போது குமரன் காவியா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா கடந்த மாதத்துடன் விலகியதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதனை தற்போது காவியாவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பாண்டியன் ஸ்டோர் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகின்றார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதனை எடுத்து தற்போது முல்லை கதாபாத்திரத்தில் சிப்பிக்குள் முக்தி தொடரின் நாயகி லாவண்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிப்பிக்குள் முத்து ஒளிபரப்பான சில மாதங்களுக்குள்ளாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு அண்மையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் மிகக் குறுகிய காலத்திலேயே இடம் பிடித்தல் லாவண்யா முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்கள் தான் என சின்னத்திரை ரசிகர்கள் பேசி வருகின்றார்கள்.