புதிய கிரெடிட் கார்டு வழங்குவதற்கு ஹெச்டிஎப்சி வங்கிக்கு போடப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. விதிமீறல் காரணமாக அந்த வங்கியின் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் கிரெடிட் கார்டு வழங்க தடைவிதிக்கப்பட்டது. இந்த உத்தரவால் ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரெடிட் கார்டு வழங்க முடியாத சூழலில் இருந்தது.
இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 2.0 டிஜிட்டல் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த சேவைகள் அனைத்தும் இனி தொடரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.