இனிமேல் குடிக்க மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் தருகிறோம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி நிபந்தனை விதித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரும் அவர்களின் நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக பீர் பாட்டிலை கொண்டு சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மதுபாட்டில் நண்பரை தாக்கிய வழக்கில் சிவா, கார்த்திக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி மது அருந்தியதன் காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. எனவே மனுதாரர்களான சிவா, கார்த்திக் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.