இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முறை நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே குடும்ப ஓய்வூதியத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மத்திய அரசின் ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதாவது தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பென்ஷன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய விதிமுறைகளின் படி மத்திய அரசு ஊழியர் பனிக்காலத்தின் போது தொலைந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் எதுவும் வழங்கப்படாது.
ஆனால் தற்போது இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஊழியரின் குடும்பத்திற்கு சம்பள நிலுவைத் தொகை மற்றும் பணிக்கால பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே காணாமல் போன அரசு ஊழியர் ஓய்வு காலத்திற்குள் மீண்டும் திரும்ப வந்தால் அந்த ஊழியர் தொலைந்து போன காலத்தில் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தொகை அவரின் சம்பளத்தொகையில் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.