Categories
மாநில செய்திகள்

இனி குறைவான பார்வைத்திறன் இருப்பவர்களுக்கு…. புதிய கருவி அறிமுகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் வெளிநாடுகளில் பல விதமான நவீனக்கருவிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. ஆனால் அதிகளவு விலை கொண்ட இந்த கருவிகளை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. இந்த நிலையில் பார்வைத்திறன் இழந்தவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் அடிப்படையில் பார்வை குறைபாடு கொண்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான புது ஹியர் சைட் HEAR SIGHT எனும் கருவி அறிமுகவிழா கோவை துடியலூர் பகுதியிலுள்ள லலிதா மகால் அரங்கில் நடந்தது.

அப்போது கருவியை அறிமுகம் செய்துவைத்த நிர்வாக இயக்குனர்கள் அசோக் குரியன் மற்றும் டிம் வேதநாயகம் போன்றோர் கூறியதாவது “உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், பார்வைச் சவால் உள்ளவர்களுக்கு இது 3வது கண் என கூறும் வகையில் இந்த கருவி செயல்படும் என்றும் கூறினார். முழுமையாகப் பார்வை இழந்தவர்கள் இந்த கருவியின் வாயிலாக யாருடைய உதவியும் இல்லாமல் இயங்கலாம். கல்விகற்க, உறவினர், நண்பர்களை அறிந்துகொள்ள, கணிணி இயக்குவது உட்பட எந்த வேலையையும் யாருடைய உதவியும் இல்லாமல் வெளியில் செல்ல என அனைத்துக்கும் ஏற்ற வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Categories

Tech |