Categories
தேசிய செய்திகள்

இனி குழந்தைகளுக்கும் பான் கார்ட் வாங்கலாம்… ஈஸியான வழி இதோ…!!!!!

பான் கார்டு என்பது தனி மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாகும். இந்த பான் கார்டு நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வங்கி கணக்கை தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் pancard  தேவைப்படுகிறது.

ஆனால் தற்போது 18 வயதிற்கு முன்பே பான்கார்டு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. நீங்கள் உங்களுடைய 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்களாக  தான் விண்ணப்பிக்க வேண்டும். பான் கார்டு ஆன்லைனில்  விண்ணப்பிக்க விரும்பினால், முதலில் நீங்கள் NSDL இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும் உள்ளே சென்றதும் விண்ணப்பதாரரின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நிரப்ப வேண்டும். அதன் பிறகு மைனரின் வயதுச் சான்று மற்றும் பெற்றோரின் புகைப்படம் உட்பட முக்கிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.இதற்கு கட்டணம் செலுத்திய பிறகு, படிவத்தை சமர்ப்பிக்கவும். இதற்குப் பிறகு உங்களுக்கு ரசீது எண் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் அறியலாம்.

விண்ணப்பித்த பிறகு 15 நாட்களில் உங்களுக்கு அஞ்சல் மூலமாக பான் கார்டு அனுப்பப்படும்.

Categories

Tech |