குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி குழந்தை பிறந்த உடனேயே ஆதார் அட்டையை உருவாக்க முடியும். இதற்கு பயோமெட்ரிக் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பயோ மெட்ரிக் பதிவு செய்தால் போதுமானது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெற சில முக்கிய ஆவணங்கள் தேவை.
அதன்படி பிறந்த சான்றிதழுடன் முகவரி சான்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆதார் அட்டை அவசியம். குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். அடையாளச் சான்று,உறவு சான்று மற்றும் பிறப்பு தேதி போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவை. இந்த அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் குழந்தையின் ஆதார் அட்டை உருவாக்கப்படும்.