தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
மேலும் கூகுள் பே, போன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலிகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களுக்குச் சென்று ஏடிஎம் கார்டு இல்லாமலேயே இந்த ஆப் மூலமாக பணம் எடுக்க முடியும். சில வங்கிகளும் இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ ஆகிய வங்கிகளில் இந்த வசதி உள்ளது.
ஆனால் இந்த வங்கிகளில் மொபைல் ஆப்களின் மூலமாகவே பணம் எடுக்க முடியும். தற்போது வாடிக்கையாளர்கள் கூகுள் பே, போன்பே, அமேசான் பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதி மிக விரைவில் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.