நாடு முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. கேஸ் சிலிண்டர்கள் வணிக ரீதியான நிறுவனங்களிலும், வீடுகளிலும் இன்றியமையாத தேவையாக உள்ளது. சிலிண்டர் விலை ஒவ்வொரு முறையும் உயரும்போது கடும் நெருக்கடி உண்டாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பைப் மூலம் எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான மெகா திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவலை பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
அதன்படி மத்திய அரசு, சிலிண்டருக்கு பதிலாக நாடு முழுவதும் பைப் மூலம் எரிவாயு விநியோகம் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பைப் மூலம் கேஸ் 82% நிலப்பரப்புக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் பைப் மூலம் கேஸ் விநியோகத் திட்டம் 98 சதவீத மக்களுக்கு வினியோகிக்க பிளான் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 12ஆம் தேதி முதல் இந்த திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள் தொடங்க உள்ளது.
இனி உள்கட்டமைப்புக்காண செயல் திட்டம் உருவாக்கப்படும். பைப் மூலம் கேஸ் வினியோகிக்கும் திட்டம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் அமலாகும். மலைப்பகுதிகள், தொலைதூர பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் இந்த திட்டம் மூலம் கேஸ் விநியோகிக்கப்படாது. பைப் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு விலை, சிலிண்டரை காட்டிலும் குறைவானது. அதோடு மட்டுமில்லாமல் எளிதாக பயன்படுத்தக்கூடியது ஆகும்.