Categories
தேசிய செய்திகள்

இனி கை நிறைய சம்பளம்…. அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக சத்தீஸ்கர் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநில அரசும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றது.

கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சத்தீஸ்கர் மாநில முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வரும் நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து ராஜஸ்தான், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தன. இந்த நிலையில் சத்தீஸ்கர் அரசு தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்தே மற்ற மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |