தமிழகத்தில் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து சமயபுரம் கோவிலில் தலை வாழையிலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், மோர், ரசம், கூட்டு, பொறியல், வடை மற்றும் பாயாசத்துடன் பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது.
மேலும் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படும். தினசரி 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் ஒரு நாள் முன்னதாக அன்னதானம் வழங்கும் திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.