Categories
தேசிய செய்திகள்

இனி சாதாரண போன்களிலும் யுபிஐ வசதி… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பட்டன் போன்களுக்கான பிரத்தியேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பட்டன் போன்களுக்கான புதிய பிரத்தியோக யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுபற்றி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், போன்களுக்கான புதிய யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள். இந்த யுபிஐ வசதிக்கு’123பே”(123PAY)  என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு “டிஜிசாதி” (DIGISAATHI)  திட்டமும் விரைவில் தொடங்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த ‘123பே” திட்டத்தின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனை அடைய முடியும் என கூறியுள்ளார்.

Categories

Tech |