சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள். அதன்படி சென்னை மாநகர பகுதிகளில் நடைபாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரியும் மாட்டின் உரிமையாளருக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்து வந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் அபராத தொகையை 2000 ரூபாயாக சென்னை மாநகராட்சி உயர்த்தி உள்ளது.