தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அதிருப்தி அடைந்ததால் அதிமுகவில் இருந்து விலகியது. இதையடுத்து திமுக, மநீம கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து மநீம கட்சி தேமுதிக கட்சிக்கு அழைப்பு விடுத்து பதில் இல்லாததால் இனி தேமுதிகவிற்கு நாங்களாக அழைப்பு விடுக்கப்போவதில்லை என்று மநீம சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்கள் கூட்டணியில் சேர தேமுதிக தாமாக முன் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.