Categories
தேசிய செய்திகள்

இனி சிம் கார்டு செல்லாது…. இன்னும் ஒரே நாள் தான் டைம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்ற டிசம்பர் மாதத் தொடக்கத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக இந்த விதிமுறையைக் கடைபிடிக்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்து இருக்க முடியும். அதையும் தாண்டி வைத்திருந்தால் அந்த சிம் கார்டு செயல் இழந்துவிடும். சிம் கார்டு வைத்திருக்ககூடிய அனைவரும் அதை வெரிஃபை செய்ய வேண்டும்.
சிம் கார்டு வாங்குவது சுலபமான ஒன்றாகும்.

ஆதார், டிரைவிங் லைசன்ஸ், ஓட்டர் ஐடி என எந்த ஒரு ஆவணம் மூலமாகவும் சிம் கார்டு வாங்கலாம். ஒரே பெயரில் நிறைய சிம் கார்டு கூட வாங்கக்கூடிய வசதி இருப்பதால் நிறையப் பேர் இலவசமாக சிம் கார்டு வாங்குவதோடு, அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாகப் பயன்படுத்திவிட்டு, அப்படியே அதை தூக்கியெறிந்துவிட்டு இன்னொரு சிம் கார்டு வாங்குவார்கள். இதேபோன்று மீண்டும் இன்னொன்று என்று மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக சிம் கார்டுகளின் எண்ணிக்கையும் மொபைல் நம்பரும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதற்காகவே புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. என்னவென்றால் ஒரு நபர் அதிகபட்சம் 9 சிம் கார்டு மட்டுமே வாங்க முடியும். இதற்க்குரிய கால அவகாசமானது நாளை முடிவடைகிறது. அதற்கு முன் சிம் கார்டுகள் அனைத்தும் வெரிஃபை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் சிம் கார்டு செயல் இழந்துவிடும். எனினும் வாடிக்கையாளர்களிடம் அதிகமான சிம் கார்டுகள் இருந்தால் அதை சரண்டர் செய்துவிட வேண்டும். இல்லாயென்றால் பிரச்சினை ஆகிவிடும்.

Categories

Tech |