புதிய LPG சிலிண்டர் வாங்க இனி எங்கேயும் அலைய வேண்டிய அவசியமில்லை. ஒரு மிஸ்ட்டு கால் கொடுத்தால் சிலிண்டர் வீடு தேடி வரும். அந்த வசதியை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் மட்டும் போதும். இந்தத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா தொடங்கி வைத்துள்ளார். indane சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் ரீபிள் செய்து கொள்ளலாம்.
ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி பொருந்தும். சிலிண்டர் ரீபிள் புக்கிங் செய்வதற்கும் புதிய இணைப்புகளுக்கும் மிஸ்டு கால் கொடுக்கும் வசதி, குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிலிண்டர் புக்கிங் செய்த பிறகு வாடிக்கையாளர்கள், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் IndianOil One App அல்லது https://cx.indianoil.in வலைதளம் மூலமாகப் பணம் செலுத்தலாம்.
அதேபோல, 758888882 என்ற வாட்ஸ் ஆப் நம்பர் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்து பேமென்ட் செய்யலாம்.