மக்கள் தங்களுக்கு ஏதேனும் இடம் அல்லது வீடு தொடர்பாக பிரச்சினை வந்தால் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்து தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். இந்நிலையில் இடம், வீட்டு வாடகை வீடு போன்ற சிவில் பிரச்னைகளில் இனி விசாரிக்கக் கூடாது என்று மதுரை மாநகர காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் வீடு, வாடகை போன்ற பிரச்சினைகளில் போலீஸ் தலையிட கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து இதுபோன்ற பிரச்சினைகளில் இனி போலீஸ் விசாரிக்காது. எனவே ஆர்டிஓ அலுவலகம் அல்லது www.tenancy.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.