பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிறுவனங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கும் சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் செல்பவர்கள் ரோம், சான் பிரான்சிஸ்கோ, ரோம் சிகாகோ, ஸ்காட்லாந்து, நியூ யார்க், பாரீஸ், வாஷிங்டன் போன்ற நகரங்களுக்கும் செல்லலாம்.
இதனால் லண்டனுக்கு செல்லும் விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த விமானம் கொரோனா காலத்திற்கு பிறகு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் இனி வாரம் தோறும் இயக்கப்படும் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.