Categories
தேசிய செய்திகள்

இனி சொந்த மாநிலங்களிலேயே…. நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு விண்ணப்பங்கள் பெற தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையங்கள் நிரம்பி விடுகின்றன.

எனவே அடுத்த ஆண்டு முதல் தேசிய தேர்வுகள் வாரியம் செயல்படுத்த வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு முதல் மாணவர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |