மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். ஏற்கனவே ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற எண்ணில் 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கும் வசதி தொடங்கியுள்ளது .
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின் கம்பியில் பழுது, மின் பெட்டிகள் பழுது, மின்தடை, புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட புகார்களை இந்த சேவை மையம் மூலமாக தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது