Categories
மாநில செய்திகள்

இனி ஜல்லிக்கட்டு போட்டிகளில்…. நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி…. அதிரடி உத்தரவு…!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும் இந்த மனுவில் நாட்டு மாடுகளில் மதில் பெரியதாக இருக்கும் என்பதால் அதனை ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாடு மற்றும் கலப்பின மாடுகளில் திமில் இருப்பதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,  ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகள் நாட்டு மாடுகள் என மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கபடும் என உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |