Categories
உலக செய்திகள்

இனி ஜாலி தான்…. கூடுதலாக வேலை செய்தால்…. மேஜை யிலிருந்து ஓடி விடுமாம்…. அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

இன்றைய சூழலில் 8 மணி நேரம் தான் வேலை என்று சொல்லும் பல நிறுவனங்களில் 8 மணி நேரத்தில் வேலை முடிவதில்லை. பதிலாக 10 முதல் 12 மணிநேரம் வரை வேலை நீடிக்கிறது. இந்த வேலை நேர இழுபறியால் மனிதனின் சாதாரண வாழ்க்கை பாதிக்கிறது. இதை சரி செய்ய சாம்சங் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ‘பேலன்ஸ் மவுஸ்’, எனும் கணினி மவுஸை வெளியிட்டுள்ளது. இந்த மவுஸின் சிறப்பம்சம் என்னவென்றால், திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு மவுஸ் தானே வேலை செய்வதை நிறுத்திவிடும்.

இதன்மூலம் பயனர்கள் வேலை நேரம் தாண்டி அதிக வேலை செய்வதை இந்த சாதனம் தடுக்கிறது. இந்த கொரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பயனர் வேலை நேரத்தை மீறி பணி செய்ய முற்படும்போது கணினி மவுஸ் மேசையிலிருந்து ஓடுவதைக் காட்சி படுத்தி வெளியிட்டுள்ளனர். கம்யூட்டர் துறையில் வேலைபார்க்கும் பலருக்கும் இது உண்மையிலேயே வரப்பிரசாதம் தான்

Categories

Tech |