இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பணித்துறையான ரயில்வே போக்குவரத்து துறை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் திட்டமான பந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல முக்கிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது.
அதன்படி வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழிப்பாதைகளில் மற்றும் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா, திருவனந்தபுரம் – மங்களூர் போன்ற வழித்தடங்களிலும் 170 கிலோமீட்டர் என்று அதிவேகத்தில் செயல்களை இயக்குவது தொடர்பாக அனைத்து திட்ட அறிக்கைகளும் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.