தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் காரணம் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர்.
இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் தமிழக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வுகான தேதியும் அறிவித்துள்ளது.
இதில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பள்ளி மேலாண்மை குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பள்ளி மேலாண்மை குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முதலில் நடத்தப்பட இருக்கிறது.குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்தப்பட இருக்கிறது.