ரயிலில் பயணம் செய்பவர்கள் ஏதேனும் காரணத்தால் டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில்வே உடனடியாக டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப கொடுக்கும் வகையில் புதிய சேவையை வழங்குகிறது. அதற்காக IRCTC-iPay என்ற பெயரில் அதன் சொந்த கட்டண நுழைவாயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த செயலியின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் எந்த வங்கியின் பேமென்ட் கேட்வே மூலமாகவும் செய்யலாம். டிக்கெட் ரத்து செய்யப்பட்ட உடன் அதன் ரீஃபண்ட் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பவும் உதவியாக இருக்கும்.
IRCTC iPay ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை:
1. iPay மூலம் முன்பதிவு செய்ய, முதலில் www.irctc.co.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அதில் பயணம் தொடர்பான இடம் மற்றும் தேதி போன்ற விவரங்களை நிரப்பவும்.
3. பிறகு, எந்த ரயிலில் பயணம் செய்வது என்பதை முடிவு செய்து, ரயிலைத் தேர்ந்தெடுக்கவும்.
4. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, கட்டண முறையில் ‘IRCTC iPay’ என்ற முதல் தெரியும்.
5. இந்த விருப்பத் தெரிவைத் தேர்ந்தெடுத்து, ‘pay and book’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
6. அதில் பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது UPI விவரங்களை நிரப்பவும்.
7. அதன் பிறகு, உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். அதன் பிறகு உறுதிப்படுத்தும் SMS மற்றும் மின்னஞ்சல் உங்களுக்கு வரும்
8. முதல்முறையாக நீங்கள் பூர்த்தி செய்யும் விவரங்கள் மீண்டும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது வந்துவிடும்.
உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
IRCTC இன் கீழ், பயனர் தனது UPI பேங்க் அக்கவுண்ட் அல்லது டெபிட்டிற்கு ஒரே ஒரு ஆணையை மட்டுமே வழங்க வேண்டும்.
காத்திருப்பு டிக்கெட்டுகளிலும் (waiting tickets) உடனடியாக பணம் கிடைக்கும்
பல முறை நீங்கள் பயணச்சீட்டு வாங்க்கும்போது உங்கள் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் (waiting tickets) இருக்கும். இறுதி பயண அட்டவணை தயாரிக்கப்பட்ட பிறகு, உங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால், காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் தானாகவே ரத்தாகிவிடும். அப்போதும், டிக்கெட்டுக்காண பணம் உடனடியாக உங்கள் கணக்கிற்கு திரும்பிவிடும்.