Categories
தேசிய செய்திகள்

“இனி டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை”….. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்….. இந்த ஒரு ஆப் போதும்….!!!!

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை எடுக்க பயணிகள் என்ற (uts ticket booking) செயலியை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செல்போன் மூலம் பணபரிமாற்றம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது. முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்துவது இல்லை. இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்டநேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன்பு காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்து விட முடியும். பெரும்பாலும் பயணிகள் டிக்கெட் பெற கடைசி நேரத்தில் வரும் சூழல் உருவாகிறது.

எனவே இருக்கின்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி கால நேர விரயத்தை தவிர்க்கலாம். உங்கள் செல்போனில் ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் ஆப் என்பதை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அதில் செல்போன் எண், பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதை சமர்ப்பிக்கும் போது நமக்கு ஒரு ஒடிபி வரும். அதையும் செல்போனில் பதிவு செய்த பிறகு நாம் பயணச்சீட்டு பதிவு செய்ய தயாராகி விடுவோம். பயணச் சீட்டு தேவைப்படும்போது நம் ரயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் கூட இதனை முன்பதிவு செய்யலாம்.

முதலில் செல்போன் எண் ஆகியவற்றை பயன்படுத்தி செயலியை முடுக்கி விடமுடியும்.  இடத்தை தேர்ந்தெடுக்கும் போது அதுவாகவே நாம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள மூன்று ரயில் நிலையங்களை காட்டும். அதில் நமக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ள முடியும். பின்னர் நாம் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தை தேர்ந்தெடுக்க அந்த ரயில் நிலையத்தில் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும். அந்த மூன்று எழுத்தில் ஆரம்பிக்கும் பல்வேறு ரயில் நிலையங்கள் திரையில் தோன்றும். அதில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதில் நாம் செல்லவேண்டிய ரயிலையும் தேர்வு செய்யமுடியும்.

பின்பு திரையில் கட்டணம் தோன்றும். கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம். பயணச்சீட்டு தற்போது பதிவாகிவிடும். இதனை வைத்துக்கொண்டு நாம் ரயிலில் பயணிக்க முடியும். இந்த செயலியின் மூலமாக ஆர்வாலட்டில் பணத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். சீசன் டிக்கெட் போன்றவற்றையும் இந்த டிக்கெட் மூலமாக நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |