நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது டிரைவிங் லைசென்ஸ் தயாரிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அந்த புதிய விதியின்படி நீங்கள் ஆர்டிஓவிடம் சென்று எந்தவிதமான ஓட்டுநர் சோதனையும் செய்ய வேண்டாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த விதிகளை அறிவித்து இந்த மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதனால் ஓட்டுனர் உரிமத்திற்கான ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலில் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆரடி ோவில் சோதனைக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அவர்கள் எந்த அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளும் ஓட்டுனர் உரிமத்திற்கான தங்களை பதிவு செய்து கொள்ள முடியும். அவர்கள் எந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயின்று அங்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் உரிமம் எளிதில் கிடைக்கும். இந்த விதியின்படி பயிற்சியாளர் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். மேலும் குறைந்தபட்சம் ஐந்து வருட ஓட்டுனர் அனுபவம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து விதிகளை அவர்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.