Categories
டெக்னாலஜி

இனி டிவி பார்க்க தடையே கிடையாது… ஆன்லைனில் செல்போன் மூலம் ஈஸியா டி.டி.எச் ரீசார்ஜ் செய்யலாம்…!!

ஆன்லைன் மூலம் DTH Recharge செய்வது எப்படி என்பதை பற்றி இதில் பார்ப்போம்.

முதலில் DTH Recharge செய்ய விரும்புவர்கள் Google Play Store-ல் Google Pay என்று Search பெய்து இந்த செயலியை Install செய்ய வேண்டும்.

அதன் பிறகு Google Pay-ஐ Open செய்தவுடன் உங்களுலைய வங்கி கணக்கு விபரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து முதல் பக்கத்தில் உள்ள New என்ற நீலநிற பட்டனை கிளிக் செய்யவும். Start a Payment பகுதியில் ஆறு (Mobile Recharge, Bill Payments, Bank Transfer, Phone Number, UPI ID or QR Code, Self Transfer) Options காண்பிக்கப்படும். அதில் இரண்டாவதாக உள்ள Bill Payments Options-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

அதில் DTH (TV) பட்டனை கிளிக் செய்து நீங்கள் Connection செய்து வாங்கி உள்ள DTH வகைகளை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு Sun Direct TV என்று கிளிக் செய்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள Smart Card (11 இலக்கு) எண்ணை கொடுத்து Link Account செய்ய வேண்டும்.

Link Account செய்த பிறகு பதிவு பெய்தவருடைய பெயர் காண்பிக்கப்படும். அந்த பெயர் கொண்ட கணக்கை கிளிக் செய்து Make payment பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் Recharge செய்யும் சந்தாவிர்கான தொகையை Type செய்து Proceed to Pay பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு Google Pay செயலியில் நீங்கள் பதிவு செய்யும் போது கொடுத்த நான்கு இலக்கு (Google Pin) எண்ணை உள்ளீடு செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு DTH Recharge செய்யப்படும்.

Google Pay செயலியில் மட்டும் இல்லாமல் Phone Pay, Paytm, Amazon போன்ற அணைத்து செயலிகள் மூலமாகவும் நீங்கள் DTH Recharge செய்து கொள்ளலாம்.

Categories

Tech |