Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இனி டி20 போட்டியில்….. “ரோஹித், கோலிக்கு இடமில்லையா?….. இளம் வீரர்களை களமிறக்க திட்டம் வகுக்கும் பிசிசிஐ..!!

இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 170 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.. இந்திய அணி போராடி தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, ஆனால் மிகவும் மட்டமாக தோல்வி அடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

ஏனென்றால் கோப்பையை வெல்லும் அணியில் ஒன்றாக பலராலும் கணிக்கப்பட்ட இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல், நெருக்கடி கூட கொடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்தததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தது.. அதுமட்டுமில்லாமல் இந்திய அணி இந்த தொடரில் சரியான தொடக்கத்தை கொடுக்கவில்லை. இதில் கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல் சரியான தொடக்கத்தை தராததால் இந்திய அணி திணறியதாக பலரும் விமர்சித்தனர். அதே சமயம் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில் அடுத்த உலகக்கோப்பையில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது.

இதற்காக இப்போதிலிருந்தே ஹர்திக் பாண்டியா தலைமையில் திறமையான இளம்வீரர்களை பிசிசிஐ கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய டி20 அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற 2024 டி20 உலக கோப்பையில் முற்றிலும் ஒரு புதிய அணி களமிறக்கப்படும் என்றும், அதற்கு ஹர்திக் பாண்டியா தான்நிரந்தர கேப்டனாக  தேர்வு செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இது பற்றி பிசிசி தலைமை அதிகாரிகளில் ஒருவர் பேசியதாவது, இனிமேல் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெற மாட்டார்கள். ஆனாலும் யாரையும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று பிசிசி கட்டாயப்படுத்தாது என்று கூறிய அவர், அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என கூறினார்.. மேலும் மூத்த வீரர்கள் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |