Categories
தேசிய செய்திகள்

இனி டெபிட் கார்டு உங்க கையில் இருந்தால் போதும்…. ஈஸியா ஷாப்பிங் பண்ணலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கோடக் மகேந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டெபிட் கார்டு EMI மூலமாக நடுத்தர மற்றும் உயர் மதிப்பு கொண்ட பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நேரடி ஸ்டோர்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கோடக் மகேந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி டெபிட் கார்டு EMI மூலமாக எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.

சாதாரண மளிகை பொருளிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மாதத் தவணைகள் ஆக பிரித்து செலுத்தலாம். அதன்படி ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நேரடி ஸ்டோர்களில் பொருள்களை வாங்கும்போது கோடக் மகேந்திரா டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் SMS மூலம் வரும் லிங்கை பயன்படுத்தி கட்டணத்தை EMI ஆக மாற்றிக்கொள்ளலாம்.

அதில் எத்தனை மாதங்கள் தவணை செலுத்த போகிறோம் என்பதையும் தேர்வு செய்யலாம். அதன் பிறகு உடனே நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணம் EMI ஆக மாற்றப்படும். அதன் பிறகு நீங்கள் டெபிட் கார்டு மூலமாக செலுத்திய பணம் மீண்டும் உங்கள் அக்கவுண்டிற்கு அனுப்பப்படும். குறிப்பாக 5 ஆயிரத்திற்கும் மேலுள்ள கட்டணங்களை EMI ஆக மாற்றிக்கொள்ள முடியும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |