எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான அசத்தலான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நவீன காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. காலத்திற்கு ஏற்றார்போல், நாமும் இருந்தால்தான் அனைவரும் நம்மை மதிப்பார்கள் என்பதற்காகவே புதிதுபுதிதாக தொழில்நுட்பங்களுடன் விலைக்கு வரக்கூடிய பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த வரிசையில், டிவி, பிரிட்ஜ், மொபைல் போன், ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் அடங்கும்.
ஆனால் இவற்றை சாதாரண சம்பளம் வாங்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் வாங்க நினைத்தால் அது கடினம். அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இஎம்ஐ என்னும் முறை. இன்றைய ஆன்லைன் வர்த்தக உலகில் இந்த EMI முறை பெரும்பாலும் ஆன்லைன்களில் ஏராளமானோருக்கு வழங்கப்படுவதில்லை. ஒரு சில வங்கிகள் மட்டுமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்குகிறது. அதிலும்,
கிரெடிட் கார்ட் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே, இந்த வசதி பெரும்பாலும் வழங்கப்படும். இந்நிலையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு மூலம் இஎம்ஐ செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி இன்று முதல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வசதி வழங்கப்படாத வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளை நேரில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.