Categories
தேசிய செய்திகள்

இனி ட்விட்டரில் இந்த வசதி….வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

டுவிட்டரானது இணையத்தின் குறுஞ்செய்திச்சேவை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகம் சான் பிரான்சிற்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பிரபல சமூக வலைத்தளமான, இந்த டுவிட்டர், நேரடியாக மக்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, தங்களது தளத்தில் கொண்டு வருகிறது.

மேலும் இதற்காக அமெரிக்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஷாப்பிங் வசதியை  மேற்கொள்வதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் கொண்டுவர உள்ளது. எனவே இதன் மூலமாக அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும்,இனி  ட்விட்டரில் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |