கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலையை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனென்றால் நாளுக்கு நாள் அதன் விலை மட்டும் குறையாமல் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதனால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த வாரம் ஓரளவு குறைவாக விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, கடந்த 5 நாட்களாகவே அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை பட்டியல் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் 20 ரூபாயாக குறைந்துள்ளது. முருங்கைக்காய் 30 ரூபாயாக குறைந்துள்ளது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி – ரூ.40
வெங்காயம் – ரூ.24
அவரைக்காய் – ரூ.20
பீன்ஸ் – 25
பீட்ரூட் – ரூ.10
வெண்டைக்காய் – ரூ.10
நூக்கல் – ரூ.10
உருளைக் கிழங்கு – ரூ.16
முள்ளங்கி – ரூ.10
புடலங்காய் – ரூ.10
சுரைக்காய் – ரூ.5
பாகற்காய் – ரூ.10
கத்தரிக்காய் – ரூ.10
குடை மிளகாய் – ரூ.20
கேரட் – ரூ.35
காளிபிளவர் – ரூ.20
சவுசவு – ரூ.7
தேங்காய் – ரூ.20
வெள்ளரிக்காய் – ரூ.7
முருங்கைக்காய் – ரூ.30
இஞ்சி – ரூ.40
பச்சை மிளகாய் – ரூ.15
கோவைக்காய் – ரூ.10