தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 392 ரூபாய் அதிகரித்து ரூ.40,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,105- க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 49 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 76.00-க்கு விற்பனையான நிலையில் இன்று 1.60 காசுகள் அதிகரித்து ரூ. 77.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.