அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 12-17 வயதினருக்கு ஆப்பிள் Airpords இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் ஆப்பிள் Airpords வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே Airpords இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தங்களது பெற்றோர் மற்றும் சட்டபூர்வ பாதுகாவலரை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மாணவர்கள் உடன் அழைத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.